முன்னணி நடிகரின் அழைப்பை கண்டுக் கொள்ளாத இளம் நடிகை

Updated in 2021-Mar-17 03:02 AM

நடிகரின் அழைப்பை கண்டுகொள்ளாத இளம் நடிகை... கோலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர், நடிகரின் அழைப்பை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம். காரணம் அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க விருப்பம் இல்லாததுதான் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தற்போது தேர்தல் களத்தில் மும்முரமாக செயல்பட்டு வருகிறார். தேர்தல் முடிந்த பிறகு இளம் இயக்குனர் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இதற்காக கதாநாயகி தேடுதல் வேட்டை நடைபெற்றுள்ளது. ஆனால், நடிகரோ முன்னணி நடிகையின் பெயரை சொல்லி அவருடன்தான் நடிக்கவில்லை, அவரை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று சொன்னாராம்.

இதற்காக படக்குழுவினர் நடிகையை அனுகிய போது விரைவில் சொல்லுகிறேன் என்று சொல்லி திருப்பி அனுப்பி இருக்கிறார். ஆனால், நடிகைக்கு அவருடன் நடிக்க விருப்பம் இல்லையாம். அதனால்தான் பெரியதாக கண்டுக்கொள்ளாமல் இருக்கிறாராம் நடிகை.