அம்மாடி இவ்வளவு ஆணவம் ஆகாதும்மா... நடிகைக்கு பறக்கும் அட்வைஸ்

Updated in 2021-Mar-27 01:54 AM

`எந்த டாப் ஹீரோவா இருந்தாலும் என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால்தான் நடிப்பேன்' என்று அசால்ட் ஸ்டேட்மெண்ட் தட்டிய டீச்சர் கேரக்டர் நடிகையை கண்டு அதிர்ந்து போய் உள்ளது திரையுலகம்.

மலையாளத்தில் அறிமுகமாகியிருந்தாலும் தமிழில்தான் அவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இதற்காக இரண்டொரு தமிழ் படங்களில் நடித்திருந்தாலும் தேசிய விருது நாயகனுடன் அவர் போட்ட குத்தாட்டம் மட்டும்தான் தமிழில் அடையாளம் என்றாகிவிட்டது.

தமிழ் சினிமா கண்டுக்கலனா என்ன நான் பக்கத்து ஸ்டேட்டுக்குப் போறேன் என டோலிவுட்டில் பிஸியாகிவிட்டார். இங்கு பல முக்கியமான பாத்திரங்களில் அவரை நடிக்க வைக்க இயக்குனர்கள் நினைத்தாலும் நம்ம நடிகையைப் பார்த்து கதை சொல்லவே டைம் கொடுக்க மாட்டேன்கிறாராம்.

கேட்டா நான் ரொம்ப பிஸி என அலட்டிக் கொள்கிறாராம். இந்த சர்ச்சை முடிவதற்குள் வேறொரு சர்ச்சையில் நம்ம நடிகை சிக்கியிருக்கிறார். முன்னணி நடிகரோடு ஜோடி போட அவருக்கு வாண்டடாக வந்த வாய்ப்பையே உதறித் தள்ளியிருக்கிறாராம். `எந்த டாப் ஹீரோவா இருந்தாலும் என் கேரக்டருக்கு முக்கியத்துவம் இருந்தால்தான் நடிப்பேன்' என்று அசால்ட் ஸ்டேட்மெண்ட் தட்டவே, வாயடைத்துப் போயிருக்கிறது திரையுலகம்.

இதனால் வேறொரு நடிகையை புக் செய்து ஷூட்டிங்கைத் தொடங்க இருக்கிறார்களாம். என்ன இருந்தாலும் இவ்வளவு ஆணவம் ஆகாதும்மா என சக நடிகைகள் சொல்லிய அட்வைஸ் காற்றில்தான் பறக்கிறதாம்.