சீனாவில் ரியல்மி நிறுவனத்தின் ஜிடி நியோ ஸ்மார்ட்போன் அறிமுகம்

Updated in 2021-Apr-01 03:07 AM

ரியல்மி நிறுவனம் தனது ஜிடி நியோ ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்புகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே, 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்டுள்ளது. ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் 6ஜிபி/8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 1200 SoC பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது. ரியல்மி ஜிடி நியோ ஸ்மார்ட்போன் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

ரியல்மி ஜிடி நியோ பின்புறத்தில் 64எம்பி பிரைமரி Sony IMX682 சென்சார், 8எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி மேக்ரோ லென்ஸ் மற்றும் 16எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

ரியல்மி ஜிடி நியோ 4500 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 50 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரைவைக் கொண்டுள்ளது. ரியல்மி ஜிடி நியோ வைஃபை 6 802.11 ax, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ் / க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் கொண்டுள்ளது.