விவோ நிறுவனத்தின் எக்ஸ்60டி ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்

Updated in 2021-Apr-02 02:42 AM

விவோ நிறுவனம் தற்போது விவோ எக்ஸ்60டி ஸ்மார்ட்போனை சீனாவில் விரைவில் வெளியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

விவோ எக்ஸ்60டி ஸ்மார்ட்போன் 6.56 இன்ச் எப்எச்டி பிளஸ் டிஸ்பிளே, 1080 x 2376 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு வசதியினைக் கொண்டுள்ளது. விவோ எக்ஸ்60டி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 1100 சிப்செட் வசதி கொண்டுள்ளது என்று தெரிகின்றது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது. மெமரி எனக் கொண்டால் இது 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

விவோ எக்ஸ்60டி ஸ்மார்ட்போன் 48எம்பி பிரைமரி லென்ஸ், 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 2எம்பி டெலிபோட்டோ லென்ஸ் மற்றும் 32எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது.

இது 4220 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது. இது இரட்டை சிம், 5ஜி, வைஃபை 6 802.11, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ்/ க்ளோனாஸ், யூ.எஸ்.பி டைப்-சி, என்.எஃப்.சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.