மனைவி மற்றும் நண்பர்களுடன் கொல்லிமலை சுற்றுலா சென்ற கிரிக்கெட் வீரர் நடராஜன் 

Updated in 2021-Apr-04 09:46 AM

சுற்றுலா சென்றார்... தனது மனைவி, குழந்தை மற்றும் நண்பர்களுடன் கொல்லிமலை சுற்றுலா சென்றுள்ளார் தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபில் போட்டியில் ஹைதராபாத் அணியில் விளையாடியது மூலம் கிரிக்கெட் உலகில் பிரபலமானார் நடராஜன். அவரது சிறப்பான பந்து வீச்சினால் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு ஆஸ்திரேலியா அணியுடனான போட்டியில் நடராஜன் விளையாடி பெரும் வரவேற்பை பெற்றார்.

அதேபோல் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும் நடராஜன் சிறப்பாக செயல்பட்டார். இந்நிலையில் விரைவில் தொடங்க இருக்கும் ஐபில் போட்டிகளுக்காக தயாராகி வரும் நடராஜன் தனது மனைவி, குழந்தை மற்றும் நண்பர்களுடன் கொல்லிமலை சுற்றுலா சென்றுள்ளார்.

அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடராஜன், "வாழ்க்கை என்பது நல்ல நண்பர்களும் சாகசங்களும்தான்" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.