மும்பையில் அதிகவிலைக்கு வாங்கப்பட்ட பங்களா

Updated in 2021-Apr-04 09:57 AM

அதிக விலைக்கு வாங்கப்பட்ட பங்களா... டி மார்ட் நிறுவனர் ராதாகிசன் தமானி, அவர் தம்பி கோபிகிசன் தமானி ஆகிய இருவரும் மும்பையில் ஒன்றரை ஏக்கர் நிலத்துடன் கூடிய பங்களாவை ஆயிரத்து ஒரு கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளனர்.

மும்பை மலபார் ஹில்சில் நாராயண் தபோல்கர் தெருவில் உள்ள அந்த பங்களா தரைத்தளமும் அதன் மீது ஒரு தளமும் கொண்டது. 60 ஆயிரம் சதுர அடி கட்டுமானப் பரப்புக் கொண்ட இந்த பங்களா புகழ்பெற்ற பிரேம்சந்த், ராய்சந்த் குடும்பத்தினருக்குச் சொந்தமானது.

90 ஆண்டுகள் பழைமையான அந்த பங்களாவை டிமார்ட் நிறுவனரும் அவர் தம்பியும் சேர்ந்து ஆயிரத்தொரு கோடி ரூபாய்க்கு விலைக்கு வாங்கியுள்ளனர்.