கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை; மத்திய அமைச்சர் தகவல்

Updated in 2021-Apr-06 11:12 AM

தட்டுப்பாடு இல்லை... பிரதமர் மோடி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் கொரோனா பரவல் தடுப்பு குறித்து காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார்.

இதற்கு முன்னோட்டமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வரதன் சட்டிஸ்கர், டெல்லி, ஹரியானா, இமாச்சலப் பிரதேசம், ஜார்க்கண்ட் , கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய 11 மாநிலங்களின் சுகாதார அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது கொரோனா தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு இல்லை என்று அவர் கூறினார். அனைத்து மாநில அரசுகளுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாக ஹர்ஷ் வரதன் தெரிவித்தார்.

வரும் வாரங்கள் மிகவும் முக்கியமானவை என்றும் கொரோனா பரவுவதைத் தடுக்க விரைந்து நடவடிக்கைகள் எடுக்குமாறும் மாநில அரசுகளிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.