கொரோனா பரவலால் ஜார்க்கண்டில் நாளை முதல் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்

Updated in 2021-Apr-06 11:13 AM

புதிய வழிகாட்டு நெறிமுறை... கொரோனா பாதிப்பு உயர்வால் ஜார்க்கண்டில் நாளை முதல் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த புதிய உத்தரவின்படி, திருமண விழாக்களில் அதிகபட்சம் 200 பேருக்கு அனுமதி வழங்கப்படும். இறுதிச் சடங்குகள் தொடர்புடைய நிகழ்ச்சிகளில் 50 பேர் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.

மத ஊர்வலங்கள் உள்பட அனைத்து ஊர்வலங்களுக்கும் தடை விதிக்கப்படுகின்றன. உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும். அனைத்து பூங்காக்களும் மூடப்படும். இதேபோன்று இரவு 8 மணிக்கு பின்னர் அனைத்து கடைகள், உணவு விடுதிகள் மற்றும் கிளப்புகள் திறந்திருக்க அனுமதி கிடையாது.

எனினும், உணவு பொருட்களை வீட்டுக்கு எடுத்து செல்வதும் மற்றும் வீட்டுக்கு சென்று விநியோகம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக அரசு வெளியிட்ட வழிகாட்டலில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.