ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என அறிவிப்பு

Updated in 2021-Apr-06 11:14 AM

திட்டமிட்டபடி நடைபெறும்... மும்பையில் நடைபெறவுள்ள ஐபிஎல் (2021) போட்டிகள் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெறும் என மகாராஷ்டிரா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அம்மாநில அரசாங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநிலத்தில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் ஐபில் போட்டிகள் பார்வையாளர்கள் இன்றி நடைபெறும்.

போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் தனி அறையில் இருக்க வேண்டுமெனவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வீரர்களுக்கு தடுப்பூசி குறித்து பிசிசிஐயின் கோரிக்கைக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கிய பின்னரே தடுப்பூசி போடப்படும் எனவும் விளக்கமளித்துள்ளது.