குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் வெற்றியாளர் கனி?

Updated in 2021-Apr-07 02:49 AM

குக் வித் கோமாளி 2 நிகழ்ச்சியின் வெற்றியாளர் கனி என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் நிகழ்ச்சி குக் வித் கோமாளி 2. கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்ச்சி பல வாரங்களை கடந்துவிட்டது.

இப்போது நிகழ்ச்சியும் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த சீசனின் வெற்றியாளர் யார் என்பது மட்டும் தான் இன்னும் மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும். மக்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பேவரெட் போட்டியாளர்கள் உள்ளார்கள். ஆனால் ஜெயித்தது யார் என்பது தெரியவில்லை.

குக் வித் கோமாளி 2வது சீசனின் வெற்றியாளர் கனி என கூறப்படுகிறது. அடுத்து ஷகீலா, அதற்கு அடுத்து அஸ்வின் விருது பெறுகின்றனர். வெற்றியாளரை அறிவிக்க சிம்பு ஸ்பெஷல் விருந்திராக வந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவரான தாமு ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், இறுதி நிகழ்ச்சி உங்களை சந்தோஷப்படுத்தும் அளவிற்கு இருக்கும். அதிகாலை 3 மணிக்கு படப்பிடிப்பும் முடிந்தும் யாரும் வீட்டிற்கு செல்லவில்லை. எல்லோருமே கண் கலங்கிவிட்டார்கள், நாங்களும் தான்.

1வது சீசனை விட 2வது சீசன் செம ஹிட், காரணம் யாருக்கும் ஈகோ இல்லை என கூறியுள்ளார்.