மாஸ்டர் இந்தி ரீமேக்கை பிரபுதேவா இயக்குவதாக தகவல்

Updated in 2021-Apr-07 02:50 AM

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கை பிரபுதேவா இயக்குகிறார். இதில் சல்மான்கான் நடிக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

கொரோனா காரணமாக இப்படம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருந்த நிலையில் மாஸ்டர் படம் பலருக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது. இந்நிலையில் மாஸ்டர் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக பரபரப்பு தகவல் இணையத்தில் வெளியானது. மேலும் அந்த படத்தில் சல்மான் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே மாஸ்டர் ரீமேக் படத்தை பிரபுதேவா இயக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. பிரபுதேவா ஏற்கனவே விஜய் நடித்த போக்கிரியை இந்தியில் சல்மான் கானை வைத்து வான்டட் என்ற பெயரில் இயக்கியிருந்தார் அந்தப் படமும் சூப்பர் ஹிட்டானது.

மேலும் சல்மான் கானை வைத்து பிரபு தேவா தபாங் 3 திரைப்படத்தை இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து ராதே என்ற படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.