ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட 22 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை

Updated in 2021-Apr-07 08:20 AM

22 ராணுவ வீரர்களுக்கு ஆயுள்... துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்பில் ஈடுபட்ட 22 ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

துருக்கியில் அதிபர் எர்டோகனை பதவியில் இருந்து நீக்கும் முயற்சியாக கடந்த 2016ம் ஆண்டு ராணுவப் புரட்சி நடந்தது. இம்முயற்சியில் 248 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் அந்த முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆட்சிக் கவிழ்ப்பில் தொடர்புடையதாக 497 ராணுவ வீரர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர்கள் மீதான வழக்கு விசாரணை முடிந்ததைத் தொடர்ந்து 22 வீரர்களுக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.