துபாயில் இருந்து இங்கிலாந்துக்கு தாயை பார்க்கச் சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்

Updated in 2021-Apr-07 08:21 AM

பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்... பல வருடங்கள் கழித்து தனது தாயை பார்க்க சென்ற பெண்ணுக்கு ஏற்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்தின் பிரிமிங்கம்மை  சேர்ந்தவர் மேரி. இவர் துபாயில் கடந்த 4 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். மேரியின் பெற்றோர் மட்டும் இங்கிலாந்தில் வசித்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் மேரியின் அம்மாவிற்கு மூளையில் கட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்ற தகவல் மேரிக்கு வந்தது. தனது அம்மாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் அவர் இங்கிலாந்திற்குப் புறப்படத் தயாரானார்.

இதையடுத்து விமானத்தில் இங்கிலாந்தின் birmingham airportக்கு வந்திறங்கிய மேரி, பாதுகாப்பு சோதனைகளை முடித்துவிட்டு தனது செல்போனை ஆன் செய்துள்ளார். அப்போது அவரது மொபைலுக்கு வந்த மெசேஜை பார்த்த மேரியின் இதயம் சுக்குநூறாக நொறுங்கிப் போனது.

அவருக்கு வந்த குறுஞ்செய்தியில், மேரியின் தாய் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக இறந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்ததும் மேரி அதே இடத்திலேயே கதறி அழுதார். அம்மாவை உயிருடன் தான் பார்க்க முடியவில்லை, அவரது முகத்தையாவது பார்க்கலாம் என அவரது வீட்டிற்குக் கிளம்ப மேரி தயாரானார். அப்போது இன்னொரு செய்தி இடியாக வந்தது.

மேரி துபாயிலிருந்து வந்த நிலையில் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதன் பிறகு தான் அவர் தனது வீட்டிற்குச் செல்ல அனுமதிக்கப்படுவார் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையே இரக்கத்தின் அடிப்படையில் மேரியை தனிமைப்படுத்துதலில் இருந்து விடுவிக்க வேண்டி சுகாதார செயலாளர் மற்றும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள கோரிக்கை மனுக்களுக்கு இதுவரை பதில் எதுவும் வரவில்லை.

எந்த பெண்ணுக்கும் எனக்கு வந்த நிலைமை வரக் கூடாது என மேரி உருக்கத்துடன் கூறியுள்ளார்.