தடுப்பூசிகளை முறையாக செலுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

Updated in 2021-Apr-07 08:22 AM

கண்டன ஆர்ப்பாட்டம்... வெனிசுலாவில் கொரோனா தடுப்பூசிகளை முறையாக செலுத்த வலியுறுத்தி மாணவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வெனிசுலாவில் தற்போது வரை 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சீனாவிலிருந்து 5 லட்சம் டோஸ் சினோபார்ம் தடுப்பூசியும், ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசி 2 லட்சத்து 50 ஆயிரம் டோஸ்களும் வெனிசுலாவிற்கு அனுப்பப்பட்டுள்ளது.

இருந்தும் அவை முறையாக செலுத்தப்படவில்லை எனக் கூறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.