சூப்பர் மார்க்கெட்டில் புகுந்த பெரிய அளவிலான உடும்பு; அச்சத்தில் கத்திய வாடிக்கையாளர்கள்

Updated in 2021-Apr-07 08:22 AM

சூப்பர் மார்க்கெட்டில் காட்சில்லாவா... தாய்லாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நுழைந்த உடும்பு பொருட்களை அடுக்கி வைத்திருந்த அலமாரி மேல் ஏறியதால் அங்கிருந்தவர்கள் அச்சமடைந்தனர்.

தாய்லாந்தில் உள்ள தாய் டிராவல் ஏனென்ஸி நிறுவனம் டிவிட்டரில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில், சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைந்த ராட்சத பல்லி இனத்த சேர்ந்த உடும்பு ஒன்று பொருட்கள் அடுக்கி வைத்திருந்த அலமாரி மேல் ஏறியது. பொருட்கள் கீழே விழுந்தும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மேலே ஏறிய உடும்பு அலமாரியின் மேல்மட்டத்திற்கு சென்று படுத்துக் கொண்டது.

ஹாலிவுட் திரைப்படங்களில் வருவதை போல் அச்சமூட்டும் வகையில் சூப்பர் மார்க்கெட்டில் உடும்பு புகுந்ததால் அங்கிருந்தவர்கள் கூச்சலிட்டனர். சூப்பர் மார்க்கெட்டிற்குள் உடும்பு நுழைந்ததை அங்கிருந்தவர்கள் வீடியோவாக எடுத்து டிவிட்டரில் பகிர, “இதுதான் உண்மை காட்சில்லா” என்றும், சூப்பர் மார்கெட்டில் பர்சஸ் செய்ய உடும்பு வந்துள்ளதாகவும் சிலர் கமெண்ட் செய்தனர்.