அடுத்த படத்தில் சான்ஸ் வாங்க முன்னணி நடிகருக்கு கொக்கி போடும் நடிகை

Updated in 2021-Apr-12 03:06 AM

முன்னணி நடிகருக்கு நடிகை போடும் கொக்கி... தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபலமாக இருக்கும் நடிகை ஒருவர் முன்னணி நடிகருக்கு கொக்கி போட்டு வருகிறாராம்.

தமிழ் சினிமாவில் ஒரு படத்தில் நடித்த நடிகையின் படம் ப்ளாப் ஆனதால், தெலுங்கு பக்கம் சென்ற நடிகை அங்கு முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்து விட்டார். தற்போது அந்த நடிகை தமிழில் முன்னணி நடிகரின் படத்தில் ஒப்பந்தம் ஆகி படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறாராம்.

இந்நிலையில், அடுத்த படத்திற்காக தமிழில் மற்றொரு முன்னணி வாரிசு நடிகருக்கு கொக்கி போட்டு வருகிறாராம். எப்படியாவது அவர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிடித்து விட வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறாராம். ஆனால் அந்த நடிகர் இவரது கொக்கியில் சிக்குவாரா மாட்டாரா என்பது போக போகத்தான் தெரியும் என்கின்றனர் கோலிவுட்வாசிகள்.