தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தும் இயற்கை பொருட்களால் ஆன ஹேர்பேக்

Updated in 2021-Jun-29 03:46 AM

தலைமுடி உதிர்வை சரிசெய்ய இயற்கையான மூன்று பொருட்களைக் கொண்டு தயார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

வெந்தயம் – 2 ஸ்பூன்
சீரகம்- 1 ஸ்பூன்
வைட்டமின் ஈ காப்சியூல்- 1

செய்முறை: வெந்தயம் மற்றும் சீரகத்தை நீரில் ஊறவைத்துக் கொள்ளவும். அடுத்து மறுநாள் காலை ஊறவைத்த பொருட்களை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த பொருளுடன் வைட்டமின் ஈ காப்சியூல் சேர்த்தால் இயற்கையான ஹேர்பேக் ரெடி. இந்த ஹேர்பேக்கினை தலைமுடியில் தேய்த்து 30 நிமிடங்கள் ஊறவிட்டு அலசவும். இது தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தும்.