பெண்களே உங்களின் கண் கருவளையங்களைப் போக்க இயற்கை வழிகள்

Updated in 2021-Jul-03 11:35 AM

கண்களைச் சுற்றி வரும் கருவளையங்களைப் போக்க இயற்கை வழிகளைக் காணும் முன், அந்த கருவளையங்கள் ஏன் வருகிறது என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டும். கருவளையங்கள் வயிற்றுப் பிரச்சனைகள், மன அழுத்தம், வேலைப்பளுவுடன் தூக்கமின்மை போன்றவைகளால் வரக்கூடும்.

கருவளையங்களைப் போக்க பல வழிகள் உள்ளன. ஆனால் அதில் முல்தானி மெட்டியைப் பயன்படுத்துவதால், கருவளையங்கள் நீங்குவதோடு கண்களைச் சுற்றியுள்ள சுருக்கங்களும் நீங்கும். சரி, இப்போது கருவளையங்களைப் போக்க முல்தானி மெட்டியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என தெரிந்து கொள்வோம்.

முல்தானி மெட்டி பொடியை வெள்ளரிக்காய் சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கண்களைச் சுற்றி தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ, கருவளையம் மற்றும் முகத்தில் உள்ள கருமையும் நீங்கும்.

முல்தானி மெட்டி மற்றும் பாதாம் முல்தானி மெட்டி பொடியுடன், பாதாம் பொடி மற்றும் கிளிசரின் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரில் கழுவ, முகம் மற்றும் கண்கள் பொலிவுறும்.

பால் ஈரப்பசையை அதிகரித்து, திசுக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். முல்தானி மெட்டி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். எனவே வாரத்திற்கு இரண்டு முறை முல்தானி மெட்டி பொடியை பாலுடன் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ, நல்ல மாற்றத்தை நீங்கள் காணலாம்.

இதேபோல் முல்தானி மெட்டியுடன் தயிர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி உலர வைத்து கழுவ, சோர்வடைந்த கண்கள் புத்துணர்ச்சி பெறுவதோடு, கண்களைச் சுற்றியுள்ள கருமையும் அகலும். சருமத்தில் உள்ள கருமையை எலுமிச்சை மிகவும் எளிதில் நீக்கும். அத்தகைய எலுமிச்சை சாற்றினை முல்தானி மெட்டி பொடியுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, கண்களைச் சுற்றி தடவி, 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.