முடி அடர்த்தியாக வேண்டுமா... இதோ உங்ளுக்காக எளிய இயற்கை வழிமுறை

Updated in 2021-Jul-05 02:33 AM

முடி அடர்த்தியை அதிகரிக்கச் செய்ய நினைப்பவர்கள் முதலில் பார்லரில் கொடுக்கும் செயற்கை கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்கு எளிய இயற்கை வழிமுறை இருக்கு. அதுபற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை:

முட்டை- 1
மயோனைஸ்- 2 ஸ்பூன்
தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்

செய்முறை: ஒரு பாத்திரத்தில் முட்டையின் வெள்ளைக்கருவை உடைத்து ஊற்றிக் கொள்ளவும். அடுத்து அதனுடன் மயோனைஸ் மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

இப்போது சூப்பரான மயோனைஸ் ஹேர்பேக் ரெடி. இந்த ஹேர்பேக்கினை தலையில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவைத்து முடியை அலசினால் முடி அடர்த்தி நிச்சயம் அதிகரிக்கும்.