முகத்தினை பளபளன்னு மாற்ற உதவும் புதினா ஃபேஸ்பேக்

Updated in 2021-Jul-08 12:58 PM

முகத்தினை பளபளன்னு மாற்ற இயற்கை பொருட்களே போதும். அந்த வகையில் முக அழகிற்கு ஒரு ஃபேஸ்பேக்கினை புதினாவைக் கொண்டு தயார் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானவை:

புதினா இலை- கைப்பிடியளவு
தயிர்- 3 ஸ்பூன்
எலுமிச்சை சாறு- 2 ஸ்பூன்

செய்முறை: புதினா இலை மற்றும் தயிரை மிக்சியில் போட்டு மைய அரைத்துக் கொள்ளவும்.

அடுத்து அரைத்த கலவையில் எலுமிச்சை சாறு சேர்த்தால் புதினா ஃபேஸ்பேக் ரெடி. இதை வாரத்திற்கு ஒருமுறை தயார் செய்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் நாளடைவில் முகம் பளபளவென்று மாறும்.