படத்தை சேல்ஸ் செய்ய செம ரூட் போட்டு கொடுத்த ஒல்லிபிச்சான் நடிகர்

Updated in 2021-Jul-11 08:29 AM

நான் அடிக்கிறது போல் அடிக்கிறேன். நீ அழுவது போல் நடி என்று ரூட் போட்டு தன் படத்தை ஓடிடியில் விற்பனை செய்ய ஐடியா கொடுத்துள்ளார் ஒல்லிபிச்சான் நடிகர் என்று கோலிவுட்டில் தகவல்கள் பேசப்படுகிறது. 

சமீபத்தில் ஒல்லிப்பிச்சான் நடிகர் நடித்த தந்திரம் படம் ரசிகர்களை கவரவில்லை என்பதான் உண்மை. இந்த படம் ஓ.டி.டி-யில் வந்தது ஒல்லிபிச்சான் நடிகருக்கு பிடிக்கவில்லை என்பது போல் தகவல்கள் பரவியது. ஆனால் இதன் பின்னணியே வேறு என்கிறார். படத்தை பார்த்த ஒல்லிபிச்சான் நடிகர் இந்த படம் தேறாது. ஓ.டி.டிக்கு தள்ளி விடுங்க, நான் கோபமாக இருப்பது போல் காட்டிக்கொள்கிறேன்.

அப்போது தான் தியேட்டர் உரிமையாளர்கள் என்னை கோபித்துக்கொள்ள மாட்டார்கள் என்று ஒரு மாஸ்டர் ப்ளானே போட்டு கொடுத்தாராம். அதனால்தான் இந்த படம் பற்றி பெரிதாக ஒல்லிபிச்சான் நடிகர் பேசவில்லையாம். என்ன ஒரு நடிப்புடா சாமி என்று கோலிவுட்வாசிகள் நொந்து கொள்கின்றனர்.