ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருவதால் வில்லனாக நடிக்க நிபந்தனை போட்ட நடிகர்

Updated in 2021-Jul-13 12:05 PM

அப்போ அப்படி... இப்போ இப்படியான்னு மூன்றெழுத்து நடிகரின் நிபந்தனையால், கடுப்பான இயக்குனர்கள், அவரை தங்களது படங்களில் இருந்து கழட்டி விட்டுள்ளார்களாம்.

மார்க்கெட் ‘டல்’ அடித்தபோது சரிவிலிருந்து தற்காத்துக் கொள்ள எந்த மாதிரியான வில்லன் வேடமானாலும் நடிப்பேன் என்று சொன்ன மூன்றெழுத்து நடிகர், தற்போது ஹீரோவாக நடிக்க வாய்ப்பு குவிந்து வருவதால் முடிவை மாற்றி விட்டாராம். 

வில்லனாக ஒப்பந்தம் செய்த இயக்குனர்களுக்கு போன் செய்து, என் ஹீரோ இமேஜை பாதிக்காத வில்லன் வேடத்தில் மட்டுமே நடிப்பேன் என்று நிபந்தனை போட்டுள்ளார். இந்த நிபந்தனையால், மூன்றெழுத்து நடிகரை வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்திருந்தவர்கள், தற்போது அவருக்கு டாட்டா காட்டி விட்டு வேறு நடிகர்களை தேடி வருகிறார்களாம்.