உச்ச நடிகரின் படத்தில் அறிமுகமான நடிகை படவாய்ப்புக்காக போடும் கொக்கி

Updated in 2021-Jul-15 07:27 AM

தமிழில் உச்ச நடிகரின் படத்தில் அறிமுகமான நடிகை அடுத்ததாக பெரிய நடிகருக்கு வலை வீசி இருக்கிறாராம். இவரது கொக்கியில் அவர் சிக்குவாரா என்று கோலிவுட் எதிர்பார்த்துள்ளது.

தமிழில் உச்ச நடிகர் படத்தில் அறிமுகமான நடிகை, அடுத்ததாக முன்னணி நடிகருடன் நடிக்க ஆசைப்பட்டு ஒரு வழியாக பட வாய்ப்பை பிடித்தார். அடுத்ததாக உச்ச நடிகரின் உறவினருக்கு கொக்கி போட்டு தூது அனுப்பி பட வாய்ப்பை பிடித்திருக்கிறாராம்.

இந்நிலையில், நடிகை அடுத்ததாக தமிழில் முன்னணி நடிகராக இருப்பவருடன் நடிக்க ஆசைப்பட்டு இருக்கிறாராம். இதற்காக தூது அனுப்பி வருகிறாராம். மேலும் அவரின் கவனத்தை ஈர்க்க பல முயற்சிகளிலும் இறங்கி இருக்கிறாராம். முன்னணி நடிகர், நடிகையை கவனிப்பாரா என்று பொருத்துதான் பார்க்க வேண்டும்.