அரவிந்த்சாமி நடித்துள்ள வணங்காமுடி படத்தின் டீசர் வெளியானது

Updated in 2021-Aug-03 07:50 AM

அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள வணங்காமுடி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் அரவிந்த் சாமி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் வணங்காமுடி. செல்வா இயக்கியுள்ள இந்த படத்தில் சிம்ரன், ரித்திகா சிங், நந்திதா ஸ்வேதா, சாந்தினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேஜிக் பாக்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமி காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. ஆனால் இதையடுத்து இந்த படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை. இதன் பின் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த படத்தின் டீஸர் ஆகஸ்ட் 3-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது. இந்நிலையில் வணங்காமுடி படத்தின் அதிரடியான டீஸர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‌