இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிக்கிறார் மலையாள நடிகர் நிவின்பாலி 

Updated in 2021-Aug-03 07:51 AM

இயக்குனர் ராம் அடுத்ததாக நிவின் பாலி நடிக்கும் படத்தை இயக்க இருக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராம். இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான தங்கமீன்கள் படம் 3 தேசிய விருதுகள் உள்பட பல விருதுகளை வாங்கி குவித்தது. இந்நிலையில் இயக்குனர் ராம் அடுத்ததாக இயக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி கதாநாயகனாக நடிக்கும் படத்தை ராம் இயக்க இருக்கிறார். மேலும் இந்த படத்தில் அஞ்சலி, சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விரைவில் இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.