காட்டுத்தீயால் துருக்கியில் இரவு நேரம் ஆரஞ்சு நிறமாக காட்சியளிப்பு

Updated in 2021-Aug-03 08:12 AM

துருக்கியில் ஏற்பட்ட காட்டுத் தீயால் இரவு நேரம் ஆரஞ்சு நிறமாகக் காட்சியளிக்கிறது. இந்த காட்டுத்தீ மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

போட்ரம் என்ற இடத்தில் ஏற்பட்ட காட்டுத் தீ கடற்கரை நகரமான கோகர்ட்மே என்ற இடத்திற்கும் பரவியது. கடந்த 6 நாட்களாகப் பற்றி எரியும் நெருப்பை விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர்.

இந்நிலையில் கோகர்ட்மே நகரின் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பினால் இரவு நேரம் அதி வெளிச்சமாகவும் கடல் பகுதி ஆரஞ்சு நிறமாகவும் காட்சியளிக்கிறது.

வலுவான காற்று மற்றும் குறைந்த ஈரப்பதம் காரணமாக நெருப்பை அணைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக துருக்கி அரசு தெரிவித்துள்ளது.