சீனாவில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 300ஐ தாண்டியது

Updated in 2021-Aug-03 08:13 AM

சீனாவில் தொடர் கனமழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய ஹெனான் மாகாணத்தில் கடந்த ஒரு மாதமாக கனமழை பெய்து வருகிறது. வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 302 ஆக உயர்ந்துள்ளது.

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 50 பேரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெங்ஜோ என்ற இடத்தில் சுரங்கப் பாதையில் வெள்ளநீர் புகுந்ததில் கார் நிறுத்துமிடத்தில் 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழை மற்றும் வெள்ளம் காரணமாக ஒரு கோடியே 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் சிக்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.