7ம் வகுப்பு வரை இசாலினி கல்வி கற்றதாக சகோதரன் தகவல்

Updated in 2021-Aug-04 04:07 AM

சிறுமி இசாலினியின் சகோதரன் தகவல்... ரிசாட் பதியுதின் வீட்டில் தீக் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த இசாலினி, அவிசாவளை, புவக்பிட்டிய, தமிழ் மகா வித்தியாலயத்தில் 7 ஆவது வகுப்பு வரை கல்வி கற்றதாக அவரது சகோதரன் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தனது சகோதரி தங்கியிருந்த அறையில் ஆங்கிலத்தில் அவரது மரணத்திற்கான காரணம் எழுதப்பட்டமை பற்றி தமக்கு எதுவும் தெரியாது என்று அவர் குறிப்பிட்டார்

தனது சகோதரி தனக்குத் தெரிந்தவரை ஏதாவது எழுதும் திறனைக் கொண்டிருந்தாலும், அவருக்கு ஆங்கில எழுத்துக்களில் ஏதாவது எழுதக் கூடிய அளவு கல்வி இல்லை என மேலும் தெரிவித்துள்ளார்.