இலங்கையில் கொரோனாவால் மேலும் 74 பேர் உயிரிழப்பு

Updated in 2021-Aug-04 04:09 AM

நாட்டில் மேலும் 74 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,645 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 315,175 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.