60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் மீண்டும் சினோபார்ம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை

Updated in 2021-Aug-04 07:41 AM

60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் மீண்டும் சினோபார்ம் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

வைத்தியசாலைகள் மற்றும் 5 மத்திய நிலையங்களில் இன்று தடுப்பூசி ஏற்றப்படும் என அவர் கூறினார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில போதனா வைத்தியசாலை, IDH வைத்தியசாலை, அவிசாவளை மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் விஹாரமகாதேவி பூங்கா ஆகிய இடங்களில் இன்று முதல் சினோபார்ம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.