பேராவூரணியில் பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

Updated in 2021-Aug-04 07:45 AM

தஞ்சை மாவட்டம் பேராவூரணி புதிய பேருந்து நிலையத்தில் கொரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சி நடந்தது.

கொரோனா நோய்த் தொற்றின் மூன்றாவது அலைப் பாதிப்பிலிருந்து தப்பிக்க அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும், கைககளை சோப்புப் போட்டு கழுவ வேண்டும் என விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் கைகளைச் சுத்தம் செய்யும் முறை குறித்து துப்புரவு ஆய்வாளா் அன்பரசன் செயல் விளக்கம் செய்து காண்பித்தாா். மேலும் புதிய பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் கைகளைக் கழுவ வசதியும் ஏற்படுத்தப்பட்டது.

இதில் செயல் அலுவலா் மணிமொழியான், துப்புரவு மேற்பாா்வையாளா்கள் வீரமணி, சிவசுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்துகொண்டனா்.