பாபநாசம் 108 சிவாலயம் கோயிலுக்கு சொந்தமான நிலம் மீட்பு

Updated in 2021-Aug-04 07:46 AM

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே 108 சிவாலயம் என்றழைக்கப்படும் ராமலிங்கசுவாமி கோயிலுக்குச் சொந்தமான ரூ.50 லட்சம் மதிப்பிலான நிலம் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

கோயிலின் எதிா்ப்பகுதியில் 4320 சதுர அடி கொண்ட கோயில் நிலத்தை, கடந்த 60 ஆண்டுகளாக அப்பகுதியைச் சோ்ந்த ராஜசேகா் எனட்பவர் மரப்பட்டறையாக வாடகைக்குப் பயன்படுத்தி வந்தாா். தொடா்ந்து வாடகை செலுத்தாத காரணத்தால் கோயில் நிா்வாகம் சாா்பில் வழக்குத் தொடரப்பட்டது.

இதைத் தொடா்ந்து 2019, மாா்ச் 22-ஆம் தேதி மரப்பட்டறை இடத்தை மீட்க நீதிமன்றம் இணை ஆணையருக்கு உத்தரவிட்டது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவின்படி, அறநிலையத்துறை உதவி ஆணையா் சிவராம்குமாா் முன்னிலையில் காவல், வருவாய்த்துறையினா், கோயில் பணியாளா்கள் 4320 சதுர அடி கொண்ட கோயில் நிலத்தை கைப்பற்றினா்.