இந்தோனேஷியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்தது

Updated in 2021-Aug-04 07:48 AM

இந்தோனேஷியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைக் கடந்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் கடுமை ஆக்கப்பட்ட போதும் டெல்டா வகை கொரோனா வேகமாகப் பரவுவதால் தினமும் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் 1,747 பேர் கொரோனாவால் உயிரிழந்ததை தொடர்ந்து பலி எண்ணிக்கை 1 லட்சத்து 636 ஆக உயர்ந்தது.

தடுப்பூசிக்குத் தட்டுப்பாடு மற்றும் தடுப்பூசி செலுத்தத் தயக்கம் போன்ற காரணங்களால் இந்தோனேஷியாவில் கொரோனா வேகமாகப் பரவுகிறது.