கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசாங்கம் முழுமூச்சுடன் செயற்படுகிறது

Updated in 2021-Aug-04 07:51 AM

நாட்டை முடக்குவது என்பது சாத்தியமில்லை. ஆனால் தடுப்பூசி வழங்கும் பணிகளை வினைத்திறனுடன் முன்னெடுத்து கொவிட் பரவலைக் கட்டுப்படுத்த அரசாங்கம் முழு மூச்சுடன் செயற்படுகிறது என்று அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், டெல்டா பரவலுடன் கொவிட் வைரஸ் பரவல் அபாயம் நாட்டில் காணப்படுகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விடயமாகும். இதற்கான பொறுப்பை சகலரும் ஏற்க வேண்டும் என்பதோடு, அரசாங்கம் என்ற ரீதியில் நாம் உரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.