பாலியல் குற்றச்சாட்டால் நியூயார்க் ஆளுநரை ராஜினாமா செய்ய அதிபர் அறிவுறுத்தல்

Updated in 2021-Aug-04 07:51 AM

பெண்களிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவை ராஜினாமா செய்யுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நியூயார்க் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ தங்களை பாலியல் ரீதியாக சீண்டலுக்கு ஆளாக்கியதாக அவரது அலுவலகத்தில் பணியாற்றும் 11 பெண்கள் புகார் கூறியதை தொடர்ந்து அட்டர்னி ஜெனரல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

விசாரணையின் முடிவில் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோ மீது கூறப்பட்ட புகார்கள் உண்மை என்பது தெரியவந்தது. இந்நிலையில் ஆண்ட்ரூ கியூமோவை ராஜினாமா செய்யுமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவுறுத்தி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.