சப்பாத்தி சாஃப்ட்டாக வர வேண்டுமா! இதோ உங்களுக்கான டிப்ஸ்!!!

Updated in 2021-Aug-22 12:32 PM

சப்பாத்தி நம்மில் பலர் விரும்பி உண்ணும் உணவுகளுள் ஒன்றாக உள்ளது. இந்த அற்புதமான உணவு சூடாக இருப்பதை விட சாஃப்ட் ஆக இருந்தால் தான் அனைவருக்கும் பிடிக்கும். இது மறுக்கவே முடியாத உண்மை. 

அப்படி சாஃப்டாக செய்ய முயலும்போது பல சமயங்களில் சொதப்பலாகி விடும். இப்படி நாம் சொதப்புவதற்கு முக்கிய காரணமாக சொதப்பலாக மாவு பிசைவதே ஆகும். அப்படி நாம் சொதப்பாமல் இருக்க ஈஸியான டிப்ஸ் என்ன என்று பார்ப்போம்.
 
சாஃப்ட் சப்பாத்தி செய்முறை: நீங்கள் சப்பாத்தி மாவை ஒரு வேளை சொதப்பலாக பிசைந்து விட்டீர்கள் என்றால் அது பற்றிய கவலையை விடுங்க. நீங்கள் பிசைந்த மாவை அப்படியே வைத்து விட்டு, ஒரு உருளைக்கிழங்கை எடுத்து குக்கரில் போட்டு நன்றாக வேகவைத்து அதன் தோல்களை நீக்கி விட்டு நன்றாக மசித்து இந்த சப்பாத்தி மாவோடு போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும்.

இப்போது பிசைந்த இந்த மாவில் மீண்டும் சப்பாத்தியை செய்து பாருங்கள். அவை நிச்சயம் சப்பாத்தி சாஃப்ட் ஆக வரும். அவற்றை உங்களுக்கு பிடித்தமான சைடிஷ்களுடன் ருசிக்கலாம்.

பின்குறிப்பு:- நீங்கள் எவ்வளவு மாவை பிசைந்து வைத்து இருக்கிறீர்களோ, அந்த அளவிற்கு தேவையான உருளைக்கிழங்கை பயன்படுத்திக் கொள்ளவும். ஒரு கப் மாவு என்றால், ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு போதுமானது.