நம்பி காத்திருந்த இயக்குனர்களை நடுத்தெருவில் விட்ட மூன்றெழுத்து நடிகர்

Updated in 2021-Aug-29 08:52 AM

மூன்றெழுத்து நடிகர் ஒருவரை நம்பி பல ஆண்டுகளாக காத்திருந்த இயக்குனர்கள் தற்போது பதறிப்போய் உள்ளார்களாம். காரணம் என்ன தெரியுங்களா?

கதை பிடித்தால் எந்த இயக்குனரின் படங்களிலும் நடிப்பேன் என்று சொல்லி வந்த மூன்றெழுத்து நடிகர் ஒருவர், இப்போது தன் பாலிசியை மாற்றிவிட்டாராம். அதாவது ஹிட் படங்களை கொடுத்தவர்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என்ற முடிவுக்கு வந்துவிட்டாராம். 

இதனால் பல ஆண்டுகளாக ஒரு ஹிட் படம் கூட கொடுக்காமல் தன்னிடம் கதை சொல்வதற்காக அணுகிய சில இயக்குனர்களிடம் ‘புதுவரவு இயக்குனர்கள், திறமை இல்லாதவர்கள் படங்களில் நடித்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை’ எனக்கூறி கைவிரித்துவிட்டாராம் அந்த நடிகர்.

இதனால் அவரை நம்பி பல ஆண்டுகளாக காத்திருந்த இயக்குனர்கள் பதறிப்போய் உள்ளார்களாம். என்னப்பா இப்படி செய்து விட்டீர்களே என்று நொந்து போய் உள்ளார்களாம்.