உங்க படத்தில் நடித்ததே தப்பா போச்சே; மில்க் நடிகை வேதனை

Updated in 2021-Aug-29 08:52 AM

அடப்பாவிங்களா உங்கள் படத்தில் நடித்ததே தப்பாக போச்சே என்று மில்க் நடிகை வேதனைப்பட்டு வருகிறாராம். என்ன விஷயம்ப்பா...

பல படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஒரு படத்தில் நடித்தது தப்பா போச்சே என்று வருத்தத்தில் இருக்கிறாராம். கணவரை பிரிந்த பிறகு அந்த நடிகை கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடித்த படம் ஒன்று வெளியாவதற்கு பிரச்சனைகள் எழுந்ததால் தன் பணத்தை செலவு செய்து படத்தை வெளியிட்டுள்ளார்.

தற்போது அதே போல் இவர் நடித்த மற்றொரு படமும் ரிலீசுக்கு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறதாம். இதை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் நடிகையை அணுக, அவரோ உங்க படத்தில் நடித்தது தப்பா போச்சே என்று வருத்தப்பட்டு புலம்பி வருகிறாராம்.