அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்ற எம்மா-வின் முதல் ட்விட்டர் பதிவு

Updated in 2021-Sep-13 09:48 AM

வைரலாகும் ட்விட்டர் பதிவு...அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்ற பின் பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு பதிவிட்ட முதல் ட்விட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

44 ஆண்டுகளுக்கு பின் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் பிரிட்டன் வீராங்கனை என்று புது மைல்கல்லை படைத்த எம்மா ரடுகானுவுக்கு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் புகழாரம் சூட்டி உள்ளார்.


கோப்பையுடன் இருக்கும் போட்டோவை வெளியிட்ட எம்மா அதில் கோப்பையை சுட்டிக்காட்டி, தாங்கள் வீட்டிற்கு கொண்டு செல்வதாகப் பதிவிட்டார். அமெரிக்க ஓபன் மூலம் 150-வது இடத்தில் இருந்து தரவரிசையில் 23-வது இடத்திற்கு உயர்ந்துள்ளார் எம்மா ரடுகானு.