பந்துகளை பறக்க விடும் தோனியின் வீடியோவை வெளியிட்ட சென்னை அணி நிர்வாகம்

Updated in 2021-Sep-18 07:49 AM

பந்துகளை பறக்க விடும் தோனி...சென்னை அணியின் பயிற்சி ஆட்டத்தின்போது தோனி பந்துகளை பறக்கவிடும் வீடியோ காட்சி ஒன்றை சென்னை அணி நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

14-வது சீசன் ஐபிஎல் தொடர் முதல் பாதி ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், அதன் இரண்டாவது பாதி இன்று முதல் தொடங்க உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் மீதம்முள்ள போட்டிகள் நாளைமுதல் தொடங்குகிறது. இன்று நடைபெறும் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.

கடந்த சீசனில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த போட்டிகளில் சென்னை அணி மோசமாக விளையாடி படுதோல்வியை சந்தித்தது. ஐபில் வரலாற்றில் முதல் முறையாக சென்னை அணி முதல் சுற்று ஆட்டத்திலையே வெளியேறியது. குறிப்பாக சென்னை அணியின் கேப்டன் தல தோனியின் ஆட்டம் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது.
 
14 போட்டிகளில் விளையாடிய அவர் 200 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். அதேபோல் நடப்பு ஐபிஎல் தொடரிலும் தோனி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதனால் தோனி மீதான நம்பிக்கை ரசிகர்களுக்கு குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில், சிஎஸ்கே வீரர்கள் பயிற்சி ஆட்டத்தின்போது, வீரர்கள் வீசும் பந்துகளை தோனி நாலாபுறமும் சிக்ஸர்களுக்கு பறக்கவிடும் வீடியோ ஒன்றை சென்னை அணி நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

இதனை பார்த்த தோனி ரசிகர்கள், பழைய தோனியை பார்த்த மாதிரி இருப்பதாக கமெண்ட் செய்துவருகின்றனர்.