கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் டிரைலர் வெளியானது

Updated in 2021-Sep-24 10:36 AM

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் சசிகுமார். கடைசியாக இவர் நடிப்பில் நாடோடிகள்- 2 திரைப்படம் வெளியாகியிருந்தது. தற்போது இவர் பகைவனுக்கு அருள்வாய், கொம்பு வச்ச சிங்கம்டா, எம்.ஜி.ஆர் மகன், ராஜவம்சம், உடன்பிறப்பே ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தை எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ளார் .

இந்த படத்தில் மடோனா செபாஸ்டின் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சூரி, ஹரிஷ் பரேடி, மறைந்த இயக்குனர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தர் குமார் தயாரித்துள்ள இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கொம்பு வச்ச சிங்கம்டா படத்தின் அதிரடியான டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.