நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி

Updated in 2021-Sep-24 11:21 AM

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட அதிர்ச்சி...அமெரிக்கா நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டமானது சோகத்தில் நிறைவடைந்துள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த நிக்கோல் ரிச்சி என்ற நடிகை தனது 40வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

அப்போது அவரது பிறந்தநாள் கேக்கில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்துள்ளனர். அதனை அணைப்பதற்காக ரிச்சி கேக்கின் அருகில் முகத்தை கொண்டு சென்ற போது அவரின் கூந்தலானது திடீரென நெருப்பில் விழுந்தது. மேலும் தீயானது தலையில் பரவத் தொடங்கியதால் ரிச்சி அதனை அணைக்க முயன்றுள்ளார்.

ஆனால் அதற்குள் தீயானது பரவி தலை முடிகளை சுருங்க செய்துள்ளது. அதிலும் அவரின் அருகில் இருந்தவர்கள் கை மற்றும் துணிக்கொண்டு ரிச்சி தலை முடியில் பரவிய தீயை அணைத்துள்ளனர். இதன் பின்னர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். குறிப்பாக நடிகையின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது சம்பவம் குறித்தான காணொளியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இதனை ரிச்சியே அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவரின் நண்பர்கள் சிலர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். அதில் "பிறந்தநாள் வாழ்த்துக்கள் டார்லிங். நீங்கள் நலமாக உள்ளீர்களா? நீங்கள் விரைவில் குணமடைய என்னுடைய வாழ்த்துக்கள்" என்று ஆறுதலும், கேலியும் செய்துள்ளனர்.