கிரேன் மூலம் சடலங்களை தொங்கவிட்ட தாலிபான்கள்

Updated in 2021-Sep-26 01:49 AM

சடலங்களை தொங்க விட்ட தாலிபான்கள்...ஆப்கானிஸ்தானிலிருந்து, அமெரிக்கா வெளியேறிய பின்னர் அஷ்ரப் கானி பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறி நிலையில் ஆட்சி கவிழ்ந்தது.

இதனால் தலைநகர் காபூல் விமான நிலையத்திலிருந்து, மற்ற நாடுகளுக்கு சென்றனர். இதனிடையே கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை பிடித்த தலிபான்கள், கடுமையான சட்டங்களை அமலுக்கு கொண்டு வந்து இருக்கின்றனர். இதனால் ஈரான் ஆட்சி முறையாக தாலிபான்கள் கையில் எடுத்தால், அது அந்த நாட்டு மக்களுக்கு மிகவும் சிக்கலை ஏற்படுத்தும் என அச்சம் உருவாகி உள்ளது.

20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில், தாலிபான் அரசு ஆட்சி அமைந்துள்ளது. புதிதாக அமைந்து இருக்கும் இந்த அமைச்சரவையில் பிரதமராக முல்லா முகமது ஹசன் பதவி ஏற்றுள்ளார். துணை பிரதமராக அப்துல் கனி பரதார் பதவியேற்றுள்ளார்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் நாட்டில் பொதுவான வெளியில் மக்களை கொன்று சடலங்கள் தொங்க விடப்பட்டுள்ளது. இந்த கொடூர செயலை ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராட் நகரிலே நடைபெற்று உள்ளது. ஹெராட் நகரின் மையப் பகுதியில் 4 உடல்களை, தலிபான்கள் கிரேன் மூலம் கட்டி தொங்கவிட்டனர்.

கடத்தல் சம்பந்தமான குற்றம் செய்த காரணத்திற்காக நால்வரும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை நேரில் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.