ரயில் தடம் புரண்டதில் 3 பேர் பலி... பலர் படுகாயம்

Updated in 2021-Sep-26 02:43 AM

அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டதில் 3 பேர் பலியானார்கள். பலர் படுகாயமடைந்தனர் என்று தெரிய வந்துள்ளது.

சிகாகோவில் இருந்து சியாட்டில் நோக்கி, 8 பெட்டிகளுடன் சென்று கொண்டிருந்த ரயில், வடக்கு மோன்டானா பகுதியில் தடம் புரண்டது. ரயிலில் 141 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் இருந்தனர். இந்த சம்பவத்தில் 3 பேர உயிரிழந்ததை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். 

பலர் காயமடைந்துள்ளனர். எத்தனை பேர் காயமடைந்தனர் என்ற தகவலை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. ரயில் தடம்புரண்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. அதில், தண்டவாளம் அருகே மக்கள் காத்துக் கொண்டிருப்பது போலவும், அவர்களுக்கு அருகே மூட்டைகள் சிதறி கிடக்கும் காட்சிகள் உள்ளன. மேலும், ரயில்பெட்டிக்கு மேல் மற்றொரு ரயில் பெட்டிகள் கிடக்கும் காட்சிகளும் பதிவாகி உள்ளது.