நாளை நடக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு முழு ஆதரவு

Updated in 2021-Sep-26 03:41 AM

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாளை நடக்கும் முழு அடைப்புக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தன்னுடைய முழு ஆதரவு தெரிவித்துள்ளது.

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மற்றும் டீசல், பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து பல்வேறு கட்சிகளின் சார்பில் நாளை நாடு முழுவதும் முழு பந்த் போராட்டம் நடைபெற உள்ளது.

இதற்கு முக்கிய கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இது குறித்து தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பின் தஞ்சை மாவட்ட தலைவர் பாண்டியன் கூறியதாவது:

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நாளை நாடு முழுவதும் நடைபெற உள்ள முழு அடைப்பு போராட்டத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தன்னுடைய முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது.

கடையடைப்பில்  வணிகர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள். விவசாய போராட்டத்திற்கு ஆதரவு தருவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.