எரிபொருள் பற்றாக்குறையால் நீண்ட வரிசையில் நின்ற வாகனங்கள்

Updated in 2021-Sep-26 03:53 AM

எரிபொருள் பற்றாக்குறை...லண்டன் நகரில் ஏற்பட்ட எரிபொருள் பற்றாக்குறையால் பெட்ரோல் பங்குகளின் முன் நீண்ட வரிசையில் வாகன ஓட்டிகள் கோபத்துடன் காத்திருந்தனர்.

பெட்ரோல் பங்குகளின் முன் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து பிரதான சாலைகள் ஸ்தம்பித்தன. பொறுமை இழந்த சில வாகன ஓட்டிகள் ஒருவரையொருவர் திட்டி சண்டையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், எரிபொருள் கையிருப்பில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் எரிபொருள் ஏற்றி வரும் டேங்கர் லாரி ஓட்டுனர்கள் பற்றாக்குறையால் இந்த பிரச்சனை ஏற்பட்டதாகவும் பிரிட்டன் அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

கோவிட் காரணத்தாலும், பிரெக்சிட்  ஒப்பந்தப்படி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து விலகியதால் வெளிநாட்டவரை லாரி ஓட்டுநர்களாக நியமிப்பதில் சிக்கல் ஏற்பட்டள்ளது.

இதனால் ஒரு லட்சத்துக்கும் அதிகமான கனரக லாரி ஓட்டுநர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதால் பெட்ரோல் பங்குகளுக்கு டேங்கர் லாரிகளில் எரிபொருள் எடுத்து செல்லும் பணிகள் தடைப்பட்டுள்ளன.