தோஹா ஒப்பந்தத்தில் அளித்த வாக்குறுதிகளை தாலிபன்கள் நிறைவேற்ற வேண்டும்

Updated in 2021-Sep-26 03:54 AM

வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்...ஆப்கனில் ஆட்சிக்கு வந்துள்ள தாலிபன்கள், தோஹா ஒப்பந்தத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை உறுதி செய்வதில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்படுவதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ்  தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபை உயர்மட்ட கூட்டத்தில் பேசுவதற்கு முன்னர் நியூ யார்க்கில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் இவ்வாறு கூறினார். அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய அரசை ஏற்படுத்துவதுடன், ஆப்கனில் தீவிரவாத குழுக்கள் பரவாமல் தடுப்போம் என்ற வாக்குறுதியையும் தாலிபன்கள் நிறைவேற்ற வேண்டும் என்றார் அவர்.

ரஷ்யா,சீனா மற்றும் பாகிஸ்தானின் பிரதிநிதிகள் கத்தாருக்கும் அதன்பின்னர் ஆப்கனுக்கும் சென்று தாலிபன்களுடனும், முந்தைய ஆப்கன் அரசு பிரதிநிதிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் செர்கி லாவ்ரோவ் தெரிவித்தார்.