ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் எளிதாக கிடைக்கவில்லை என இளவரசர் ஹாரி தம்பதி வருத்தம்

Updated in 2021-Sep-26 03:57 AM

ஏழை நாடுகளுக்கு தடுப்பூசிகள் கிடைப்பதில்லை...கோவிட் தடுப்பூசிகள் ஏழை நாடுகளுக்கு எளிதாக கிடைப்பதில்லை என இளவரசர் ஹாரியும் அவரது மனைவி மேகனும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் 60 ஆயிரம் பேர் கலந்துக் கொண்ட Global Citizen திருவிழாவில் பேசிய மேகன், உலகளவில் இதுவரை தயாரிக்கப்பட்ட கோடிக்கணக்கான கோவிட் தடுப்பூசிகள் 10 பணக்கார நாடுகளுக்கு மட்டுமே சென்றுள்ளதாகவும் மற்ற நாடுகளுக்கு கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.

என் மனைவி என்று இளவரசர் ஹாரி பேச்சை தொடங்கியபோது, கூட்டத்தில் இருந்தவர்கள் பலத்த கரகோஷங்கள் எழுப்பி நட்சத்திர தம்பதியை உற்சாகப்படுத்தினர்.