சீனாவில் ஓட்டுனர் இல்லாத டாக்ஸிகள் சோதனை ஓட்டம்

Updated in 2021-Sep-26 03:59 AM

ஓட்டுனர் இல்லா டாக்ஸிகள் சோதனை ஓட்டம்...சீனாவின் பாய்டு நிறுவனம் ஓட்டுனர் இல்லா டாக்ஸிகளின் சோதனை ஓட்டத்தை நகர சாலைகளில் தொடங்கியுள்ளது.

ஷாங்காயின் ஜியாடிங் மாவட்டத்தில் இதற்கென பிரத்தேயகமாக ஒதுக்கப்பட்ட 5.6 கிலோ மீட்டர் நீள சாலையில், பாய்டு நிறுவனத்தின், ஓட்டுனர் இல்லா ஸ்மார்ட் டாக்ஸிகள் விடப்பட்டுள்ளன.

அந்நிறுவனத்தின் ஸ்மார்ட் செயலி மூலம் புக் செய்து பயணிகள் ஸ்மார்ட் டாக்ஸியில் பயணிக்கலாம். 2023-ஆம் ஆண்டுக்குள் சீனாவின் 30 நகரங்களில் ஸ்மார்ட் டாக்ஸிகளை விட பாய்டு நிறுவனம் திட்டமிட்டுள்ள நிலையில், சீனாவில் 2030-ஆம் ஆண்டுக்குள் ஓட்டுனர் இல்லா டாக்சி தொழில்நுட்ப துறையின் சந்தை மதிப்பு 35 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என சந்தை வல்லுனர்கள் கணித்துள்ளனர்.