Web Advertisement Contact

பழிக்கு பழி தீர்த்துக் கொண்ட நியூசிலாந்து; ஒருநாள் தொடரை கைப்பற்றியது

Updated in 2020-Feb-08

ஒருநாள் போட்டி தொடரை வென்றது... இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 

நியூசிலாந்து சென்ற இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் நியூசிலாந்து வென்றது. இரண்டாவது போட்டி ஆக்லாந்தில் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் கோஹ்லி, பீல்டிங் தேர்வு செய்தார். 

களம் இறங்கிய நியூசிலாந்து அணிக்கு கப்டில், நிகோல்ஸ் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்க இருவரும் ரன்களை குவித்தனர். முதல் விக்கெட்டுக்கு 93 ரன்கள் சேர்த்த போது நிகோல்ஸ் (41), சகால் சுழலில் சரிந்தார். சகால் பந்தில் இப்போட்டியின் முதல் சிக்சர் அடித்த கப்டில், அரைசதம் எட்டினார்.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை, நியூசி., இழந்தது. பிளண்டல் 22 ரன் எடுத்தார். ஒரு கட்டத்தில் 142/1 (26.2 ஓவர்) என வலுவான நிலையில் இருந்த நியூசிலாந்து, அடுத்த 55 ரன் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது (197/8). இந்நிலையில் ராஸ் டெய்லர் (73), ஜமைசன் (25) இணைந்து கைகொடுக்க, நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 273 ரன்களை குவித்தது. தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணிக்கு சரியான சரிவு காத்திருந்தது.

துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய பிரித்ஷா (24), அகர்வால் (3), விராட் கோலி (15) என்று சொற்ப ரன்களில் அவுட் ஆக இந்திய அணி தடுமாற்றத்தை சந்தித்தது. இருப்பினும் ஷ்ரேயாஸ் அய்யர் (52), ராகுல் (4), ஜாதவ் (9) ஜடேஜா (55) ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி தோல்வியை நோக்கி நகர ஆரம்பித்தது.

தொடர்ந்து களமிறங்கிய தாகூர் (18) ரன்கள் எடுத்தார். இறுதியாக பவுலர் ஷைனி (45) நிலைத்து ஆடியும் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 3 போட்டிகளை கொண்ட தொடரை 2-0 என்று புள்ளிக்கணக்கில் நியூசிலாந்து வென்றுள்ளது.